Friday, April 03, 2009

உறவுகள்

அடுத்தவீட்டிலிருப்பவர்கள் கூட யாரென்று தெரியாத நகர வாழ்கையில் நியூக்ளியர் குடும்பமாக வாழ்ந்துவரும் சூழலில் ,குழந்தைகள் பாரம்பரியமிக்க தமது குடும்பத்தின் வழித்தோன்றல்களை அறிந்துவைத்திருப்பது மிகவும் கடினம் தான்.
இளம்தலைமுறையினருக்கு குடும்பமுன்னவர்கள் பற்றிய விபரங்களோ உறவு முறையோ தெரியாத நிலையை பலவிடங்களில் காணமுடிகிறது.
கூட்டுக்குடும்ப வாழ்கைமுறையை கொண்டிருந்தவர்கள் பலரும் பல்வேறு இடங்களுக்கு பணி நிமித்தமாகவும் படிப்பு நிமித்தமாகவும் பறந்துவிட்ட போதும், உறவுகளுக்குள் கல்யாணம் போன்ற விஷேடங்களுக்குக் கட்டாயம் சென்றாக வேண்டிய நிலையிலும் குழந்தைகளைப் பல்வேறு காரணிகளால் அழைத்துச் செல்லவும் உறவினர்களை அறிமுகப்படுத்தியும் வைக்கும் சூழல் ஏற்படுவதில்லை.
குழந்தைகளுக்கு அறிவுறுத்துவதைவிட நிகழ்கால சமுதாயத்தினருக்கே விழிப்புணர்வு மிக அவசியமாகிவிட்டது என்பதும் மறுப்பதற்கில்லை.
இந்நிலைக்கு ஒரு மருந்தாக குடும்ப வரைபடம் அமைத்து அதில் உறுப்பினர்களின் சுய விபரங்கள்,பிறந்தநாள், திருமண நாள், சிறப்பு தினங்கள் போன்றவற்றைக் குறித்துவத்தும் அந்நாட்களில் வாழ்த்துச் சொல்லியும் பழகினால், மேம்பட்ட உறவினையும் விடுதலில்லாத தொடர்பையும் பெறலாம்.
குடும்ப வரைபடத்தை உருவாக்க இந்த மென்பொருளைத் தரவிறக்கி நிறுவியபின் தகவல்களை உள்ளீடு செய்யவேண்டியதுதான்.
அனைத்து தகவல்களையும் பல்வேறு இடங்களில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணையம் வாயிலாகவும் அறியலாம் .

உறவுகள