Friday, April 03, 2009

உறவுகள்

அடுத்தவீட்டிலிருப்பவர்கள் கூட யாரென்று தெரியாத நகர வாழ்கையில் நியூக்ளியர் குடும்பமாக வாழ்ந்துவரும் சூழலில் ,குழந்தைகள் பாரம்பரியமிக்க தமது குடும்பத்தின் வழித்தோன்றல்களை அறிந்துவைத்திருப்பது மிகவும் கடினம் தான்.
இளம்தலைமுறையினருக்கு குடும்பமுன்னவர்கள் பற்றிய விபரங்களோ உறவு முறையோ தெரியாத நிலையை பலவிடங்களில் காணமுடிகிறது.
கூட்டுக்குடும்ப வாழ்கைமுறையை கொண்டிருந்தவர்கள் பலரும் பல்வேறு இடங்களுக்கு பணி நிமித்தமாகவும் படிப்பு நிமித்தமாகவும் பறந்துவிட்ட போதும், உறவுகளுக்குள் கல்யாணம் போன்ற விஷேடங்களுக்குக் கட்டாயம் சென்றாக வேண்டிய நிலையிலும் குழந்தைகளைப் பல்வேறு காரணிகளால் அழைத்துச் செல்லவும் உறவினர்களை அறிமுகப்படுத்தியும் வைக்கும் சூழல் ஏற்படுவதில்லை.
குழந்தைகளுக்கு அறிவுறுத்துவதைவிட நிகழ்கால சமுதாயத்தினருக்கே விழிப்புணர்வு மிக அவசியமாகிவிட்டது என்பதும் மறுப்பதற்கில்லை.
இந்நிலைக்கு ஒரு மருந்தாக குடும்ப வரைபடம் அமைத்து அதில் உறுப்பினர்களின் சுய விபரங்கள்,பிறந்தநாள், திருமண நாள், சிறப்பு தினங்கள் போன்றவற்றைக் குறித்துவத்தும் அந்நாட்களில் வாழ்த்துச் சொல்லியும் பழகினால், மேம்பட்ட உறவினையும் விடுதலில்லாத தொடர்பையும் பெறலாம்.
குடும்ப வரைபடத்தை உருவாக்க இந்த மென்பொருளைத் தரவிறக்கி நிறுவியபின் தகவல்களை உள்ளீடு செய்யவேண்டியதுதான்.
அனைத்து தகவல்களையும் பல்வேறு இடங்களில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணையம் வாயிலாகவும் அறியலாம் .

உறவுகள

Tuesday, March 31, 2009

Saturday, November 29, 2008

இலவசமாக குறுந்தகவல் அனுப்பலாம்

இந்தியாவிற்குள் செல்லிடைப்பேசிகளுக்கிடையே
குறுந்தகவல்களை அனுப்புவதற்கு இந்த தளத்தினை
உபயோகிக்கலாம். நன்றாகவே இருக்கிறது.

Thursday, November 20, 2008

தமிழில் ஜாதகம் கணிக்கும் மென்பொருள்

தமிழில் ஜாதகம் கணிக்கும் ஒரு மென்பொருளை
இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.

Thursday, November 06, 2008

தாணுமாலயஸ்வாமி திருக்கோயில்

தாணுமாலயஸ்வாமி திருக்கோயில் தரிசனத்தின் போது 12-07-2008.

Thursday, October 30, 2008

நண்பர் செல்வராஜ் அவர்களுடன் 2008, அக்டோபர் 10ம் நாள், மும்பை ஜவுளி கண்காட்சியில் பங்கேற்றபோது.

Friday, October 10, 2008




29-09-2008 அன்று அடியேன் நண்பர் திரு.செல்வராஜ் அவர்கள் மற்றும் திரு.கதிர்வேல் அவர்களுடன் திருமலை திருப்பதி தரிசனத்தின் போது.

Wednesday, August 20, 2008

ஐடிகாரர்களுக்கு...


ஒரு புண்ணியவான் சொல்லியிருக்கிறார்......


என்னவென்றால்,

நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடையது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை , நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக , அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ , திறமையாளர் என்றோ , பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.
உறவினர்களை
அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை , இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது!

வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா ? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!
பத்து
ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால் , ஒரு நாள்... இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.

உணவு , உறக்கம் , ஓய்வு , காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மனதைச் சீர்குலைத்தால் , 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னையாகி விடும். யோசியுங்கள்.
எப்போதும்
.ஸி-யில் இருப்பதால் , உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது , உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு , எலுமிச்சை , ஆரஞ்சு , ஆப்பிள் , திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் நிகழ வேண்டிய காலைக் கடனை முடிக்க மாத்திரைகள் சாப்பிடுவதும் நல்லதல்ல. கண்களிலும் கவனம் வையுங்கள்.

உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும் ; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும் , சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.
காதலிக்கும்போது
அல்லது திருமணத்துக்குப் பெண் தேடும் போது... சம்பளம் , வேலைவாய்ப்பு , செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு , ஒழுக்கம் , குணம் , பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
'
இன்று போலவே என்றும் சம்பளம் வரும் ' என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள். உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக , சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள். அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள்.

வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது , ஓட்டல்களில் தங்கிக் கொண்டு... உறவினர்களை- அம்மா- அப்பாவை , '' என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்... ஆட்டோவுக்கு வேண்டுமானால் காசு தருகிறேன்! '' என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள். பணத்தை விட ரத்தம் கனமானது.
வெளிநாடுகளில்
பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி... அதாவது உங்களின் பெற்றோர் , உங்கள் பிள்ளையைக் கொஞ்சுவதற்கு- உணவு ஊட்டு வதற்கு அனுமதி கொடுங்கள்.

உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால் , என்னை மன்னியுங்கள்! உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும் , உங்களைப் போன்றோ ரின் பெற்றோர்கள் , உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள். நான் வெறும் தபால்காரன்... அவ்வளவே! நமக்கு வரும் எந்த நோட்டீஸூக்கும் தபால்காரனை நோக முடியாது.

Thursday, August 07, 2008

கன்னியாகுமரி

12-07-2008 அன்று, நண்பர் செல்வராஜ் அவர்களுடன் கன்னியாகுமரி பயணத்தின் போது.




பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய


விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே

மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Wednesday, August 06, 2008

ஜாதகம் தமிழில் கணிக்கும் மென்பொருள்

அன்புடைய தமிழ் பெருமக்களுக்கு,

ஜாதகம் தமிழில் (தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில்)
கணிக்கக்கூடிய மென்பொருளை
இந்த சுட்டியிலிருந்து
தரவிறக்கம் செய்துகொள்ளலாம்।

யாம் கண்டெடுத்த இன்பம் பெறுக இவ்வையகம்!



Friday, July 25, 2008

நவ பிருந்தாவனம் பயணம் -19-03-2008


அடியேன், நண்பர்கள் திரு.வீரக்குமார்,
திரு செல்வராஜ்
அவர்களுடன்
நவபிருந்தாவன
தரிசனத்தின் போது

19-03-2008


பூவரசங்குப்பம் நரசிம்மப் பெருமாள் கோயில்



பூவரசங்குப்பம் நரசிம்மப் பெருமாள் கோயில் முன்பு அடியேனும், நண்பர் திரு.மு. செல்வராஜ் அவர்களும்.


29-11-2007


Saturday, June 23, 2007

இருபதை கடந்த இளைஞனாய் இருந்த நான்
இல்லறம்கான திருமணம் செய்து வாழ்தினாய் நீ !
இனிய இல்லறம் நடத்திய உனக்கு
இன்னொரு அறுபதாம் திருமணம் செய்து வாழ்த்துப் பெற்றேன் நான் !
நடந்த என்கால்கள் மிதிவண்டி பழகமிதிவண்டி வாங்கி வந்தாய் நீ !
நடந்த உன்கால்கள் தடுக்கி விழாமல் இருக்க
ஊன்றுகோல் வாங்கி வந்தேன் நான் !
தோழனாய் மாறி பாலன் என்னுடன்
பம்பரம், கோலி விளையாடி மகிழ்ந்தாய் நீ !
தோழனாய் மாறி பழுத்த உன்னுடன்
பரமபதம், சோளி விளையாடி மகிழ்ந்தேன் நான் !
திருவிழாக்களுக்கும், கடைவீதிகளுக்கும்
அன்பாக தூக்கி சென்றாய் நீ !
திருக்கோவில்களுக்கும், கடற்கரைகளுக்கும்
அன்பாக அழைத்து சென்றேன் நான் !
அருகிலிருந்து அக்கறையாய் எனக்குஅரிச்சுவடி சொல்லி கொடுத்தாய் நீ !அருகிலிருந்து ஆர்வத்துடன் உனக்குஅன்றாட
செய்திகளை வாசித்தேன் நான் !
யானையாய் மாறி என்னை இடம் வலமாய்தூக்கி
சுமந்தது மகிழ்த்து, மகிழ்ந்தாய் நீ !
பூனையாய் மாறி உன்னை அங்கும் இங்கும்தூக்கி
அறைகுள் இடம் மாற்றி நெகிழ்ந்தேன் நான் !
தவழ்ந்தது போதும் என்று தள்ளாடி தள்ளாடி எழுந்த நான்,
தடுக்கி விழாமல் நடை பழகதள்ளும் நடைவண்டி வாங்கினாய் நீ !
தளர்ந்ததால் உன் நடைதள்ளாடி தள்ளாடி தவழும் நிலைக்கு வந்த போது தள்ளும் சக்கர நாற்காலி வாங்கினேன் நான்!
எனக்கொரு குழந்தையாய் மாறினாய் நீ !
உனக்கொரு தந்தையாய் மாறிப் போனேன் நான் !
கருவறைவிட்டு வந்த என்னை,ஆனந்த கண்ணீருடன், நெகிழ்ந்த இதயத்துடன்கைகளில் ஏந்தி சென்றாய் நீ !
கல்லறைக்குள் விட்டு செல்ல உன்னை,ஆ(ற்)றாத கண்ணீருடன், கனத்த இதயத்துடன் தோள்களில் தூக்கி செல்கிறேன் நான் !

நன்றி-கோவி.கண்ணன்