இருபதை கடந்த இளைஞனாய் இருந்த நான்
இல்லறம்கான திருமணம் செய்து வாழ்தினாய் நீ !
இனிய இல்லறம் நடத்திய உனக்கு
இன்னொரு அறுபதாம் திருமணம் செய்து வாழ்த்துப் பெற்றேன் நான் !
நடந்த என்கால்கள் மிதிவண்டி பழகமிதிவண்டி வாங்கி வந்தாய் நீ !
நடந்த உன்கால்கள் தடுக்கி விழாமல் இருக்க
ஊன்றுகோல் வாங்கி வந்தேன் நான் !
தோழனாய் மாறி பாலன் என்னுடன்
பம்பரம், கோலி விளையாடி மகிழ்ந்தாய் நீ !
தோழனாய் மாறி பழுத்த உன்னுடன்
பரமபதம், சோளி விளையாடி மகிழ்ந்தேன் நான் !
திருவிழாக்களுக்கும், கடைவீதிகளுக்கும்
அன்பாக தூக்கி சென்றாய் நீ !
திருக்கோவில்களுக்கும், கடற்கரைகளுக்கும்
அன்பாக அழைத்து சென்றேன் நான் !
அருகிலிருந்து அக்கறையாய் எனக்குஅரிச்சுவடி சொல்லி கொடுத்தாய் நீ !அருகிலிருந்து ஆர்வத்துடன் உனக்குஅன்றாட
செய்திகளை வாசித்தேன் நான் !
யானையாய் மாறி என்னை இடம் வலமாய்தூக்கி
சுமந்தது மகிழ்த்து, மகிழ்ந்தாய் நீ !
பூனையாய் மாறி உன்னை அங்கும் இங்கும்தூக்கி
அறைகுள் இடம் மாற்றி நெகிழ்ந்தேன் நான் !
தவழ்ந்தது போதும் என்று தள்ளாடி தள்ளாடி எழுந்த நான்,
தடுக்கி விழாமல் நடை பழகதள்ளும் நடைவண்டி வாங்கினாய் நீ !
தளர்ந்ததால் உன் நடைதள்ளாடி தள்ளாடி தவழும் நிலைக்கு வந்த போது தள்ளும் சக்கர நாற்காலி வாங்கினேன் நான்!
எனக்கொரு குழந்தையாய் மாறினாய் நீ !
உனக்கொரு தந்தையாய் மாறிப் போனேன் நான் !
கருவறைவிட்டு வந்த என்னை,ஆனந்த கண்ணீருடன், நெகிழ்ந்த இதயத்துடன்கைகளில் ஏந்தி சென்றாய் நீ !
கல்லறைக்குள் விட்டு செல்ல உன்னை,ஆ(ற்)றாத கண்ணீருடன், கனத்த இதயத்துடன் தோள்களில் தூக்கி செல்கிறேன் நான் !
நன்றி-கோவி.கண்ணன்
Saturday, June 23, 2007
Friday, May 04, 2007
Tuesday, April 17, 2007
Wednesday, March 14, 2007
Monday, February 19, 2007
என் தந்தையே!..
கரு கொடுத்து உருவாக்கினாய்விரல் பிடித்து நடை பழக்கினாய்கண்டிப்புடன் கல்வி தந்தாதாய்பணிவுடன் பாசமும் பொறுமையும் தந்தாய்நம்பிககையுடன் கல்லூரி செல்கையில்தைரியம் என்ற ஆயுதம் பழக செய்தாய்தன்னம்பிகையுடன் ப்ணிக்கு செல்லும்போதுதன் கடமை முடிந்த்தாய் உன் இதய்ம் ஓய்வு எடுத்தபோதும் தவித்து நின்றால் உன் முயற்சிகள் தோற்றுவிடும் - என நீ கற்றுதத்த பாடங்களின் உதவியுடன் உன் ஆசிர்வாதங்களுடனும்என் ஆயுளுக்கும் ஓடி கொண்டிருப்பேன்.உன் மரணம் கூட எனக்கு பாடம் தந்தது. - என் தந்தையே!

Subscribe to:
Posts (Atom)