இருபதை கடந்த இளைஞனாய் இருந்த நான்
இல்லறம்கான திருமணம் செய்து வாழ்தினாய் நீ !
இனிய இல்லறம் நடத்திய உனக்கு
இன்னொரு அறுபதாம் திருமணம் செய்து வாழ்த்துப் பெற்றேன் நான் !
நடந்த என்கால்கள் மிதிவண்டி பழகமிதிவண்டி வாங்கி வந்தாய் நீ !
நடந்த உன்கால்கள் தடுக்கி விழாமல் இருக்க
ஊன்றுகோல் வாங்கி வந்தேன் நான் !
தோழனாய் மாறி பாலன் என்னுடன்
பம்பரம், கோலி விளையாடி மகிழ்ந்தாய் நீ !
தோழனாய் மாறி பழுத்த உன்னுடன்
பரமபதம், சோளி விளையாடி மகிழ்ந்தேன் நான் !
திருவிழாக்களுக்கும், கடைவீதிகளுக்கும்
அன்பாக தூக்கி சென்றாய் நீ !
திருக்கோவில்களுக்கும், கடற்கரைகளுக்கும்
அன்பாக அழைத்து சென்றேன் நான் !
அருகிலிருந்து அக்கறையாய் எனக்குஅரிச்சுவடி சொல்லி கொடுத்தாய் நீ !அருகிலிருந்து ஆர்வத்துடன் உனக்குஅன்றாட
செய்திகளை வாசித்தேன் நான் !
யானையாய் மாறி என்னை இடம் வலமாய்தூக்கி
சுமந்தது மகிழ்த்து, மகிழ்ந்தாய் நீ !
பூனையாய் மாறி உன்னை அங்கும் இங்கும்தூக்கி
அறைகுள் இடம் மாற்றி நெகிழ்ந்தேன் நான் !
தவழ்ந்தது போதும் என்று தள்ளாடி தள்ளாடி எழுந்த நான்,
தடுக்கி விழாமல் நடை பழகதள்ளும் நடைவண்டி வாங்கினாய் நீ !
தளர்ந்ததால் உன் நடைதள்ளாடி தள்ளாடி தவழும் நிலைக்கு வந்த போது தள்ளும் சக்கர நாற்காலி வாங்கினேன் நான்!
எனக்கொரு குழந்தையாய் மாறினாய் நீ !
உனக்கொரு தந்தையாய் மாறிப் போனேன் நான் !
கருவறைவிட்டு வந்த என்னை,ஆனந்த கண்ணீருடன், நெகிழ்ந்த இதயத்துடன்கைகளில் ஏந்தி சென்றாய் நீ !
கல்லறைக்குள் விட்டு செல்ல உன்னை,ஆ(ற்)றாத கண்ணீருடன், கனத்த இதயத்துடன் தோள்களில் தூக்கி செல்கிறேன் நான் !
நன்றி-கோவி.கண்ணன்
7 comments:
//Saturday, June 23, 2007
இருபதை கடந்த இளைஞனாய் இருந்த நான்
இல்லறம்கான திருமணம் செய்து வாழ்தினாய் நீ !
இனிய இல்லறம் நடத்திய உனக்கு
இன்னொரு அறுபதாம் திருமணம் செய்து வாழ்துப் பெற்றேன் நான் !//
தியாகராஜன்...
நன்றி ! ஏன் சொல்கிறேன் என்று தெரிந்திருக்கும்
:)
நேரம் கிடைத்தால் இதையும் படியுங்கள் !
கோவி.கண்ணன் அவர்களே,
நன்றிக்கு நன்றி.ஏன் சொல்கிறேன் என்று தெரிந்திருக்கும்
உயர்திரு தியாகராஜன் அவர்களுக்கு! அழகிய கவிதையை உரைநடையோல் அளித்துள்ளீர்கள். சற்றே மடித்து மடித்து எழுதியிருந்தால் நன்றாயிருந்திருக்கும். உரைநடைபோல் நீளமாக எழுதிவிட்டீர்கள். ஆயினும் கூறவந்த பொருள் அருமை. சில இடங்களில் ஒற்றுப்பிழைகள் உள்ளன. கணினியில் தட்டச்சிசெய்யும் போது தாங்கள் அறியா வன்னம் நிகழ்ந்திருக்கும் என நினைக்கிறேன். வாழ்த்துகள்- த் போட மறந்துவிட்டீர்கள். சக்கரம் என்பதே சரி சற்கரம் என்பது தவறு. பிழையின்றி எழுதினால் இன்னும் துய்த்து மகிழ இலகுவாயிருக்கும். வாழ்த்துகள்.
வணக்கம் அகரம்.அமுதா அவர்களே. தவறு திருத்தப் பட்டது. மிக்க நன்றி. எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல, கவிதையை வடித்த திரு கோவி.கண்ணன் அவர்களுக்கே பாராட்டுகள் உரித்தானவை.உணர்வோடு ஒன்றிவிட்டதால் பதித்திருக்கிறேன்.
எது எப்படி இருப்பினும் கவிதை அருமை. எழுதியவருக்கும் அதை இடுகை செய்த தங்களுக்கும் என் வாழ்த்துகள்.
Superb. Fine yaar
வாருங்கள்.வணக்கம் திருமிகு அண்ணார் தமிழ் நெஞ்சம் அவர்களே.
வருகைக்கு நன்றி.
வாழ்த்துகளை கண்ணணுடன் பகிர்ந்துகொள்வோம்.
Post a Comment