Friday, April 03, 2009

உறவுகள்

அடுத்தவீட்டிலிருப்பவர்கள் கூட யாரென்று தெரியாத நகர வாழ்கையில் நியூக்ளியர் குடும்பமாக வாழ்ந்துவரும் சூழலில் ,குழந்தைகள் பாரம்பரியமிக்க தமது குடும்பத்தின் வழித்தோன்றல்களை அறிந்துவைத்திருப்பது மிகவும் கடினம் தான்.
இளம்தலைமுறையினருக்கு குடும்பமுன்னவர்கள் பற்றிய விபரங்களோ உறவு முறையோ தெரியாத நிலையை பலவிடங்களில் காணமுடிகிறது.
கூட்டுக்குடும்ப வாழ்கைமுறையை கொண்டிருந்தவர்கள் பலரும் பல்வேறு இடங்களுக்கு பணி நிமித்தமாகவும் படிப்பு நிமித்தமாகவும் பறந்துவிட்ட போதும், உறவுகளுக்குள் கல்யாணம் போன்ற விஷேடங்களுக்குக் கட்டாயம் சென்றாக வேண்டிய நிலையிலும் குழந்தைகளைப் பல்வேறு காரணிகளால் அழைத்துச் செல்லவும் உறவினர்களை அறிமுகப்படுத்தியும் வைக்கும் சூழல் ஏற்படுவதில்லை.
குழந்தைகளுக்கு அறிவுறுத்துவதைவிட நிகழ்கால சமுதாயத்தினருக்கே விழிப்புணர்வு மிக அவசியமாகிவிட்டது என்பதும் மறுப்பதற்கில்லை.
இந்நிலைக்கு ஒரு மருந்தாக குடும்ப வரைபடம் அமைத்து அதில் உறுப்பினர்களின் சுய விபரங்கள்,பிறந்தநாள், திருமண நாள், சிறப்பு தினங்கள் போன்றவற்றைக் குறித்துவத்தும் அந்நாட்களில் வாழ்த்துச் சொல்லியும் பழகினால், மேம்பட்ட உறவினையும் விடுதலில்லாத தொடர்பையும் பெறலாம்.
குடும்ப வரைபடத்தை உருவாக்க இந்த மென்பொருளைத் தரவிறக்கி நிறுவியபின் தகவல்களை உள்ளீடு செய்யவேண்டியதுதான்.
அனைத்து தகவல்களையும் பல்வேறு இடங்களில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணையம் வாயிலாகவும் அறியலாம் .

உறவுகள

18 comments:

Suresh said...

அருமையான உதவியான பதிவும் கூட :-)

நன்பா தொடர்ந்து எழுதுங்கள்\

வாழ்த்துக்கள்

//குழந்தைகளுக்கு அறிவுறுத்துவதைவிட நிகழ்கால சமுதாயத்தினருக்கே விழிப்புணர்வு மிக அவசியமாகிவிட்டது என்பதும் மறுப்பதற்கில்லை.

உண்மை

//இந்நிலைக்கு ஒரு மருந்தாக குடும்ப வரைபடம் அமைத்து அதில் உறுப்பினர்களின் சுய விபரங்கள்,பிறந்தநாள், திருமண நாள், சிறப்பு தினங்கள் போன்றவற்றைக் குறித்துவத்தும் அந்நாட்களில் வாழ்த்துச் சொல்லியும் பழகினால், மேம்பட்ட உறவினையும் விடுதலில்லாத தொடர்பையும் பெறலாம்.//

சரியான சவுக்கடி :-) அருமை
குடும்ப வரைபடத்தை உருவாக்க இந்த மென்பொருளைத் தரவிறக்கி நிறுவியபின் தகவல்களை உள்ளீடு //

Suresh said...

wanted to follow u but follower widget is not there

தியாகராஜன் said...

/// Suresh said...

அருமையான உதவியான பதிவும் கூட :-)///

நண்பர் சுரேஷ் அவர்களுக்கு நன்றிகள் பல

வடுவூர் குமார் said...

The download link is not working ( may be only NOW).
Thanks for sharing.

தியாகராஜன் said...

///வடுவூர் குமார் said...

The download link is not working ( may be only NOW).
Thanks for sharing.///

வரவேற்கிறேன் அண்ணன் வடுவூர் குமார் அவர்களே.
பெரியவர்களெல்லாம் தளத்திற்கு வருவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
பயமாகவுமிருக்கிறது.
தவறு திருத்தப்பட்டது.
நன்றி அண்ணார் அவர்களே!.

தமிழ்நெஞ்சம் said...

keep writing.

Enjoy Blogging.

வேலன். said...

நல்ல் பதிவு நண்பரே...

தாங்களை தொடர்புகொள்ளஇயலவில்லை...
தொடர்பு கொள்ளவும்.

வாழ்க வளமுடன்:,
வேலன்.

தியாகராஜன் said...

/// தமிழ்நெஞ்சம் said...

keep writing.///

வாருங்கள் அண்ணார் அவர்களே,வணக்கம்.
மிகவும் கஷ்டப்பட்டு ஏதோ எழுதிவிட்டேன்.
எல்லாம் தாம் கொடுத்துக்கொண்டிருக்கும் உத்வேகம் தான்.

அன்பு நண்பர் கோவி.கண்ணன் அவர்களுக்கும் எமது நன்றிகள். பலரையும் எழுதத்தூண்டுவார்.

தியாகராஜன் said...

///வேலன். said...

நல்ல் பதிவு நண்பரே...///

அன்பு நண்பருக்கு வணக்கம்.
மிக்க நன்றி.

கோவி.கண்ணன் said...

//இந்நிலைக்கு ஒரு மருந்தாக குடும்ப வரைபடம் அமைத்து அதில் உறுப்பினர்களின் சுய விபரங்கள்,பிறந்தநாள், திருமண நாள், சிறப்பு தினங்கள் போன்றவற்றைக் குறித்துவத்தும் அந்நாட்களில் வாழ்த்துச் சொல்லியும் பழகினால், மேம்பட்ட உறவினையும் விடுதலில்லாத தொடர்பையும் பெறலாம்.//

தியாகு, உங்கள் ஆதங்கமும் அதற்கு தீர்வு கூறுவதும் அருமை. நானும் கடைபிடிக்க முயற்சிக்கிறேன்.

பாராட்டுகள்

குறும்பன் said...

தியாகு இந்த இடுகைக்கு தொடர்பில்லாத கேள்வி. ஆனா கேள்வி உங்களுக்கு தான் இஃகிஃகி.

வாத்தியாரோட தளத்தில் உங்களின் சோதிடம் குறித்த மென்பொருள் பற்றி அறிவிப்பு இருந்தது. நான் அதை தரவிறக்கம் செய்து install செய்தால் error வருகிறது. நான் windows vista OS ல் install பண்ண முயற்சித்தேன்.

அம்மென்பொருள் Windows Vista வை ஆதரிக்குமா?

Prabhagar said...

நண்பா,

நிறைய எழுதுங்க...

பிரபாகர்

தியாகராஜன் said...

///Blogger Prabhagar said...

நண்பா,

நிறைய எழுதுங்க...

பிரபாகர்////

நண்பருக்கு வணக்கம்.
வலையுலக ஜாம்பவான்கள் பலர் எழுதுவதற்கும் வழிகாட்டவுமிருக்கிறார்கள்.
தமது ஊக்கத்திற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அறிவன்#11802717200764379909 said...

Hi,Can you please let me know hw to install the tamil astro software you had helped with in Subbiah vaththiar's blog for Vista?

I fund that this works fine in XP but could not load it in Vista.

Any suggestion please?

Appreciate if you can email at enmadal@yahoo.com

தியாகராஜன் said...

///Hi,Can you please let me know hw to install the tamil astro software you had helped with in Subbiah vaththiar's blog for Vista?

I fund that this works fine in XP but could not load it in Vista.

Any suggestion please?///

நண்பரே,
கணிணி சார்ந்த அறிவு அவ்வளவாக எனக்கு இல்லை.
ஆகவே தமக்கு உதவிட இயலவில்லை.
மன்னிக்கவும்.
நன்றி.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

அம்பாளடியாள் said...

எம் இளைய தலைமுறையினரின் நன்மைகருதியும் உறவுப் பாலங்கள் சிதைந்து போகாமலும் இருக்க
தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி மிகவும் வரவேற்கத் தக்கது.இந்த பகிர்வுகண்டு மிகவும் சந்தோசம் அடைந்தேன் வாழ்த்துக்கள் சகோதரரே உங்கள் முயற்சி வெல்ல!.......